ஆலமரத்துக்கு 101வது பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

ஆலமரத்துக்கு 101வது பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

1 mins read
6cb0f8ee-dce7-4447-b27f-ec6cfaf3a358
கடந்த ஆண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படம்: இந்திய ஊடகம் -

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடியிருக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

புயல், வெள்ளம், இடி என எத்தனையோ இயற்கைச் சீற்றங்களையும் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பிரச்சினைகளையும் சந்தித்து, சாதித்து கம்பீரமாக இருக்கும் அந்த மரத்துக்கு கடந்த ஆண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நூற்றாண்டைக் கடந்துவிட்டதால் இந்த 101வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 23 அன்று நடப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலமரத்தை மின் விளக்குகளால் அலங்கரித்த அப்பகுதியினர் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். கொரோனா மற்றும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நீர்நிலை இயக்கம், பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்