மதுரை: மக்களைக் காக்கவே திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

மதுரை: மக்களைக் காக்கவே திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

1 mins read
cd3edce8-bda9-4a2d-ab26-545b4f87f8d3
ராஜசேகரன். படம்: ஊடகம் -

மதுரை: கொரோனா கிருமிப் பரவலைத் தடுத்து, இத்தொற்று பாதிப்பால் அல்லல்படும் மக்களைக் காப்பாற்றவே தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருடன் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

"திருடர்கள் எல்லாம் கெட்டவர்கள் அல்ல," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் உள்ள கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 5,000 ரூபாயைத் திருடிய திருடன், அந்தக் கடையில் இருந்த 18 வகையான மூலிகைப் பொருட்களையும் திருடி உள்ளார்.

திருடிய பொருட்களை எல்லாம் ஒரு சாக்குமூட்டையில் கட்டித் தூக்கிக்கொண்டு, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலிசார், திருடனைப் பிடித்து சில கேள்விகளைக் கேட்டு விசாரித்தவுடன் கடையில் பொருட்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

திருட்டில் ஈடுபட்டவர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ சேகர்(படம்) என்பதும் கிருமி பரவலைத் தடுப்பதற்காகவே 18 வகையான மூலிகைப் பொருட் களைத் திருடியதாகவும் அவர் போலிசாரிடம் கூறினார்.

திருடன் தனது திருட்டுக்கும் ஒரு நியாயம் கற்பித்துள்ளது மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.