மஞ்சூர்: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிரா மத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் விதிகளை மீறி அதிக மானோர் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் பெங்களூரிலிருந்து வந்த இளைஞர் ஒருவரும் கொேரானா தொற்றுடன் பங்கேற் றுள்ளார். அவர் மூலம் 105 பேருக்கு தொற்று பரவியது.
சுகாதாரத் துறையினர் இத்திரு மணத்துடன் சம்பந்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் சளி மாதிரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதேபோல், எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவரால் தொற்று பரவியுள்ளது.
ஊசி தொழிற்சாலையில் பணிபுரியும் 750 ஊழியர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 115 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த இரு சம்பவங்கள் மூலம் 220 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

