ஜெயலலிதா நினைவு இல்லம்: நிலம் கையகப்படுத்த இழப்பீட்டுத் தொகை செலுத்திய தமிழக அரசு

ஜெயலலிதா நினைவு இல்லம்: நிலம் கையகப்படுத்த இழப்பீட்டுத் தொகை செலுத்திய தமிழக அரசு

1 mins read
ceba3f61-ddc8-4f28-9f5a-416f74c4bc6b
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.  படம்: ஊடகம் -

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.

24,322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது.

மேலும், ஜெயலலிதா செலுத்தாமல் விட்ட வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியைச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்