அமைச்சர்: நாளை முதல் இலவச முகக்கவசம்

அமைச்சர்: நாளை முதல் இலவச முகக்கவசம்

1 mins read
f07386e6-9a04-4cf4-ad8b-5c5592ca7d16
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உத­ய­கு­மார். படம்: ஊடகம் -

மதுரை: கொரோனா கிரு­மித் தொற்றை துடைத்­தொ­ழிக்க இன்­னும் மருந்­து­கள் எது­வும் கண்­டு­பி­டிக்கப்படாமல் உள்ள சூழ்­நிலை­யில், உயிர் காக்­கும் கவ­ச­மாக முகக்­க­வ­சத்­துக்கு முக்கியத்­து­வம் கொடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்த முகக்­க­வ­சம் இல்­லா­மல் ஏழை எளிய மக்­கள் பல­ரும் சிர மப்­பட்டு வரு­வதைக் களையும் விதத்தில், குடும்ப அட்­டை­தா­ரர்­களுக்கு இலவச முகக்­க­வ­சம் நாளை முதல் வழங்­கப்­பட உள்­ள­தாக தமி­ழக வரு­வாய்த் துறை அமைச்­சர் ஆர்.பி. உத­ய­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

மதுரை மாவட்­டம், வாடிப்­பட்டி அருகே கச்­சைக்­கட்­டி­யில் நடை­பெற்ற சிறப்பு மருத்­துவ முகாமை பார்­வை­யிட்­ட அமைச்­சர், செய்­தி­யா­ளர்­களிடம் கூறுகையில், "தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள குடும்ப அட்­டை­தா­ரர்­களுக்கு இல­வச முகக்­க­வ­சம் வழங்­கு­வதை தமிழக முதல்­வர் நாளை தொடங்கி வைக்க உள்­ளார். கொரோனா தொற்று பாதிப்பை ஆரம்ப நிலை­யி­லேயே கண்­ட­றிந்து உரிய சிகிச்சை அளிப்­ப­தற்­காகவே கொரோனா பரி­சோ­த­னை­கள் அதி­க­ள­வில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

"கொரோனா தொற்று பாதிப்­புக்­கான தடுப்பு மருந்­து­கள் கிடைக்­கும்­வரை, பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­க­வேண்­டும். தேவை இருந்­தால் மட்­டுமே முகக்­க­வ­சம் அணிந்து வெளியே செல்­ல­வேண்­டும்," என்­றார்.