கல்வித்துறை: ஆகஸ்ட் 3ல் மாணவர் சேர்க்கை என்ற தகவல் தவறானது அமைச்சர்: பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை

2 mins read
9582d447-b435-4bfd-9d2b-b7d834e020da
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தாக்­கத்­தால் விளையும் பாதிப்­பு­கள் ஒரு முடி­வுக்கு வரும் வரை, பள்­ளிக்­கூ­டங்­க­ளைத் திறப்­ப­தற்கு வாய்ப்பே இல்லை என்று பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் செங்­கோட்­டை­யன் திட்ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

ஈரோட்­டில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அமைச்­சர் கூறு­கை­யில், "அடுத்த மாதம் அல்­லது செப்­டம்­பர் மாதம் பள்­ளி­க­ளைத் திறப்­பது தொடர்­பாக மத்­திய அரசு எங்­க­ளுக்கு அறி­வுரை கூறி கடி­தம் எழுதி உள்­ளது. இது­கு­றித்து ஆலோ­சித்து வரு­கி­றோம்.

"எனி­னும், இப்­போ­தைக்கு பள்­ளி­க­ளைத் திறக்­கும் எண்ணம் இல்லை. மாநி­லத்­தில் நில­வும் சூழ்­நி­லை­யைப் பொறுத்தே முடிவு எடுக்­கப்­படும். கொரோனா பாதிப்புகள் இருக்­கும்­வரை பள்­ளி­க­ளைத் திறக்­க­மு­டி­யாது.

"சரி­யான நேரத்­தில் முதல்­வ­ரு­டன் ஆலோ­சனை செய்து முடிவு செய்­யப்­படும். 10ஆம் வகுப்பு மதிப்­பெண் பட்­டி­யல் தயார் செய்­யும் பணி­கள் நடந்து வரு­கின்றன. இந்த பட்­டி­யல் அடுத்த மாதம் வழங்­கப்­படும்," என்று கூறினார்.

கொரோனா பாதிப்­பின் கார­ண­மாக நாடு முழு­வ­தும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி மையங்­கள் மூடப்­பட்­டன. இதன் ­கா­ர­ண­மாக தமி­ழ­கத்­தில் பள்ளி, கல்­லூரித் தேர்­வு­களும் ரத்து செய்­யப்­பட்­டன.

அண்மையில் 10ஆம் வகுப்பு பொதுத்­தேர்வு ரத்து செய்­யப்­பட்டு அனைத்து மாண­வர்­களும் தேர்ச்சி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அதே­போல் கல்­லூரி மாணவர்கள் முத­லாம், இரண்­டாம் ஆண்டு 'செமஸ்­டர்' தேர்வு இன்றி அடுத்த ஆண்­டுக்குச் செல்வதற்கு முதல்வர் உத்தரவு ­பிறப்பித்திருந்தார்.

இதற்­கி­டையே, வரும் ஆகஸ்ட் 3ல் அர­சுப் பள்­ளி­களில் மாண­வர் சேர்க்கை தொடங்­கும் என வெளி யான தக­வல் தவ­றா­னது என்­றும் மாண­வர் சேர்க்கை தொடர்­பாக இது­வரை எந்த முடி­வும் எடுக்­கப்­படவில்லை என்­றும் பள்­ளிக் கல்­வித்துறை விளக்­கம் அளித்­துள்­ளது.

மாண­வர் சேர்க்கை தொடர்­பாக நோட்­டீஸ் ஒட்­டி­யுள்ள பள்­ளி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் பள்­ளிக் கல்­வித்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

பள்ளிகளைத் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு சரியான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

செங்கோட்டையன்