சாலையில் கொரோனா நோயாளிகள் போராட்டம்

2 mins read
2e9beba6-97e2-4402-a75c-318f1b23be12
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். படம்: ஊடகம் -

திருப்பெரும்புதூர்: கொரோனா கிருமித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டவர்­கள் அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் அனு­மதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இதுபோல் அனுமதிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்களுக்கு எந்த ஒரு அடிப்­படை வச­தியும் செய்து தரப்­ப­ட­வில்லை என்று கூறி திடீர் போராட்­டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்­சி­பு­ரம், மாங்­காட்டை அடுத்த சிக்­க­ரா­ய­பு­ரம் பகு­தி­யில் இயங்கி வரும் தனி­யார் மருத்­து­வக் கல்லூரி மருத்துவமனை­யில் குன்­றத்­தூர், மாங்­காடு உள்­ளிட்ட பகு­தி­களைச் சேர்ந்த கொரோனா நோயாளி­கள் தங்கி சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்நிலையில், மருத்துவ மனையில் தங்கியிருந்தவர்கள் உணவு சரியான முறையில் வழங் கப்படுவது இல்லை, கழி­வறை வச­தி­கள் இல்லை, குப்­பை­களைச் சரி­வர அகற்­று­வ­தில்லை, குழாய்களில் தண்­ணீர் வரு­வ­தில்லை, முறை­யாக மருந்­து­கள் வழங்­கப்படுவதில்லை என்று போராட்டம் நடத்தியபோது அடுக்கடுக்காக குற்­றம்­சாட்டினர்.

"எந்த அடிப்­படை வச­தி­களும் இல்­லாத தனியார் மருத்துவ மனையின் கொரோனா வார்­டில் நாங்­கள் தங்கமாட்­டோம்," என்று கூறி வெளியே வந்தவர்கள், பூந்­த­மல்லி, குன்­றத்­தூர் சாலை­யில் அமர்ந்து மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

எனி­னும் அவர்­கள் தனி­ம­னித இடை­வெ­ளியை முறைப்­படி கடைப் பிடித்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நோயாளிகளின் போராட்டத்தைக் கண்டு அதிர்ந்த அப்­பகுதி ­மக்­கள், காவல்துறையினர், வரு­வாய்த்­து­றை­யி­ன­ருக்கு தக­வல் கூறி­னர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடுபாபு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டார்.

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கொரோனா வார்­டில் தேவை­யான அனைத்து வச­தி­களும் செய்துகொடுக்க நட­வ­டிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு நோயாளிகள் கொரோனா வார்­டுக்கு திரும்­பிச் சென்­ற­னர்.