துருக்கியைச் சேர்ந்த ஓர் ஆடவர் குடையூர்தியில் பறந்துகொண்டே ('பேராகிளைடிங்') மேளம் வாசிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
600 மீட்டர் உயரத்தில் மற்றொருவருடன் கீழ்நோக்கிப் பறந்தவர், துருக்கியின் டெக்கிர்டாக் மாநிலத்தைச் சேர்ந்த அக்மெத் ஜெலிக் என்றும் இவர் முழுநேர இசைக்கலைஞராகப் பணியாற்றுகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுபோல மற்றொருவர் குடையூர்தியில் பயணம் செய்துகொண்டே தொலைக்காட்சி பார்ப்பதைக் காட்டும் காணொளியும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவுகிறது.

