சேலை அணியும் 'எந்திரப் பெண்' வாடிக்கையாளர்களுக்கு செய்யும் உபகாரம்

1 mins read
1924bd06-5f89-433d-97a6-b32eab17ff9b
-

தமிழகத்தில் கிருமிப்பரவலின் எண்ணிக்கை ஏறுமுகமாக இருக்கும் இந்நேரத்தில் ஜவுளிக் கடை ஒன்று தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நூதனமான வழியைக் கையாண்டிருக்கிறது.

சேலை உடுத்தியுள்ள பெண்ணைப் போலத் தோற்றமளிக்கும் இந்த இயந்திர மனிதன், தன் கையில் கை சுத்திகரிப்பானை தாங்கிக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதனை வழங்குவதைக் காட்டும் பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இயந்திர மனிதன் பணிபுரியும் கடையின் பெயர் என்ன என்பதும் அந்தக் கடை தமிழகத்தில் எங்கு உள்ளது என்பதும் தற்போது தெரியவில்லை.

கிருமிப்பரவல் சூழலின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக தொழில்நுட்பம் இவ்வாறு பயன்படுத்தப்படுவதை இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.