சென்னை: நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளது அதிமுக. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் அதிமுக களமிறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அமைப்புச் செயலாளர்களை நியமனம் செய்து கட்சித்தலைமை அறிவித்துள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளராக கருப்பசாமி பாண்டியன், சிவகாமி, இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், திருச்சி ரத்தினவேல், திண்டுக்கல் மருதுராஜ், தென்காசி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த பாப்புலர் வி.முத்தையா, தென்சென்னை தி. நகரைச் சேர்ந்த நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக விபிபி பரமசிவம் என்பவரை அதிமுக நியமித்து உள்ளது.

