88 வயது மனைவி இறந்த ஒன்றரை மணி நேரத்தில் 92 வயது கணவர் மரணம்

88 வயது மனைவி இறந்த ஒன்றரை மணி நேரத்தில் 92 வயது கணவர் மரணம்

1 mins read

திரு­வை­யாறு: தஞ்சை மாவட்­டம் திரு­வை­யாறு பாவா­சாமி அக்­ர­ஹா­ரத்­தைச் சேர்ந்­த­வர் சுப்­பு­ராவ் (வயது 92). இவர், சென்னை பிர­சி­டென்சி கல்­லூ­ரி­யில் உடற்­கல்வி இயக்­கு­ந­ராக பணி­பு­ரிந்து ஓய்­வு­பெற்­ற­வர். இவ­ரது மனைவி ஹேமா (88). இணை­பி­ரியா தம்­ப­தி­யான இவர்­க­ளுக்கு குழந்­தை­கள் இல்லை. இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் மாலை 4.30 மணி அள­வில் ஹேமா திடீ­ரென்று இறந்­தார்.

மனைவி இறந்ததை அறிந்து சுப்புராவ் மிகுந்த மன­வே­தனை அடைந்தார். இத­னால் தாங்க முடியாத சோகத்தில் உறைந்திருந்த சுப்­பு­ராவின் உயிர், தமது மனைவி இறந்த 1½ மணி நேரத்­தில், மாலை 6 மணி­ய­ள­வில் திடீ­ரென்று பிரிந் தது.