டெங்கி காய்ச்சல் பரவல்: கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

1 mins read
653ffe3f-0e29-418e-8f54-2445b0b8b166
கோப்புப்படம்: ஏஎப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் டெங்கி காய்ச்­சல் பர­வத் தொடங்கி இருப்­ப­தாக வெளி­யான தக­வ­லை­ய­டுத்து அர­சுத் தரப்­பில் பல்­வேறு நட­வடிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அரசு உத்­த­ர­வு­க­ளைப் பின்­பற்­றா­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை பாயும் என சென்னை மாந­க­ராட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே தமி­ழ­கத்தை கொரோனா கிரு­மித் தொற்று ஆட்டு­வித்து வரும் நிலை­யில் டெங்கி காய்ச்­ச­லும் இப்­போது தலை­தூக்­கி உள்­ளது. கிரு­மித்­தொற்று பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக சென்­னை­யில் உள்ள வணிக வளா­கங்­க­ளை­யும் பெரிய கடை­களை­யும் மூட­வேண்­டும் என மாந­க­ராட்சி உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து டெங்கி காய்ச்­சல் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யி­லும் சென்னை மாந­க­ராட்சி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக அதன் ஆணை­யர் பிர­காஷ் தெரி­வித்­துள்­ளார்.

மாந­க­ராட்­சிப் பணி­யா­ளர்­கள் சென்­னை­யில் வீடு வீடா­கச் சென்று தொற்­றுப் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அச்­ச­ம­யம் வீட்­டில் உள்­ள­வர்­க­ளி­டம் வீட்­டைச் சுத்­த­மா­க­வும் சுகா­தா­ர­மா­க­வும் வைத்­துக்­கொள்­ளும்­படி அறி­வு­றுத்த வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"சுகா­தா­ரம் இல்­லாத கட்­ட­டங்­கள், காலி இடங்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு டெங்கி விழிப்­பு­ணர்வு குறித்து முத­லில் நோட்­டீஸ் வழங்­கப்­படும். அதன்­பி­ற­கும் அதே நிலை நீடித்­தால் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

"இறு­தி­யாக முறை­யான சுகா­தார ஏற்­பா­டு­கள் இல்­லாத இடங்­கள் மாந­க­ராட்­சிக்­குச் சொந்­த­மா­னவை என்று அறி­விப்­புப் பலகை வைக்­கப்­படும்," என்­றார் ஆணை­யர்.

இதற்­கி­டையே தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­கள், அலு­வ­ல­கங்­கள், பேருந்து நிலை­யங்­கள் உள்­ளிட்ட இடங்­க­ளி­லும் குடி­சைப் பகு­தி­க­ளி­லும் கொசு உற்­பத்­தி­யைத் தடுக்க கிருமி நாசி­னி­யும் கொசு மருந்­தும் அடிக்­கும் பணி தொடங்­கி­யுள்­ளது.