கோவையில் 37 மணிநேர ஊரடங்கு

கோவையில் 37 மணிநேர ஊரடங்கு

1 mins read
8215d8f5-b61a-4b8d-9adf-5b14e85f36ae
கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையம். படம்: ஊடகம் -

கோவை: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக கோவையில் 37 மணி நேர தளர்வில்லா ஊரடங்கு இன்று காலை வரை அமல்படுத்தப்பட்டது.

இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கோவை நகரில் நேற்று முக்கியச் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவையில் கொவிட்-19 நோய்த் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தளர்வில்லா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அந்நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மருந்துக் கடைகளும் கூட சில மணி நேரங்களே திறந்திருந்தன. பாதுகாப்புப் பணியில் 3,500 போலிசார் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர்.

கோவையில் கொவிட்-19 நோய்க்கு இதுவரை 38 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.