101 வகை உணவு வகைகளுடன் மருமகளுக்கு வாழையிலை விருந்து

101 வகை உணவு வகைகளுடன் மருமகளுக்கு வாழையிலை விருந்து

1 mins read
623faef0-8075-4961-8fb2-b6c31e76a52d
-
Google News Preferred Icon

மதுரையில் புதுமணத்தம்பதியருக்காக தாயார் ஒருவர் 101 உணவு வகைகளைக் கொண்டுள்ள வாழையிலை விருந்தைத் தயாரிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அபுல் ஹஸான்- ஷஃப்னா தம்பதியருக்காக மாப்பிள்ளையின் தாயார் அஹிலா இந்த விருந்தைத் தயாரித்துள்ளார். இந்த விருந்து எங்கு, எப்போது நடந்தது என்பது தெளிவாக இல்லை.

பிரியாணி, பொரித்த சோறு, இறைச்சி, கோழி, மீன், முட்டை, காடை, பரோட்டா, சப்பாத்தி போன்ற 101 உணவு வகைகளை வாழை இலைகளில் திருவாட்டி அஹிலா வைத்த காட்சி, சமூக ஊடகங்களில் பலரது கண்களைக் குளிரச் செய்துள்ளது.

சாப்பாடு பிரம்மாண்டமாக இருந்தாலும் திருமணம் எளிமையாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Watch on YouTube