உலகிலேயே இப்போது இந்தியாவில்தான் கொவிட்-19 நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக 'புளூம்பெர்க்' செய்தி தெரிவிக்கிறது. அங்கு கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20% கூடியதாகவும் மொத்த பாதிப்பு 1.4 மில்லியனைத் தாண்டிவிட்டதாகவும் புளூம்பெர்க் நிறுவனத்தின் 'கொரோனாவைரஸ் டிராக்கர்' தரவுகள் கூறுகின்றன. இதனிடையே, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 49,931 பேரை கொரோனா தொற்றிவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அங்கு கிருமித்தொற்று பாதிப்பு 1,435,453ஆக அதிகரித்து இருக்கிறது. அத்துடன், கொரோனாவால் மாண்டோர் பட்டியலில் மேலும் 708 பேர் இணைய, மொத்த உயிரிழப்பு 32,771ஆக உயர்ந்தது. கிருமித்தொற்றைப் பொறுத்தமட்டில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந் தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது. ஆயினும், புதிதாக கொரோனா தொற்றுவோர் விகிதத்தில் இந்தி யாவே முதலிடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே, நேற்று மட்டும் 515,472 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரி வித்தது. ஆயினும், உலகில் குறை வான விகிதத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நாடு களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. ஆயிரம் பேருக்கு 11.8 என்ற அளவிலேயே அங்கு பரிசோதனை கள் இடம்பெற்று வருகின்றன. இவ்விகிதம் அமெரிக்காவில் 152.98 ஆகவும் ரஷ்யாவில் 184.34ஆகவும் இருப்பதாக ஆக்ஸ்ஃபர்ட

