மதுரை: மறைந்த முன்னாள் அதிபர் அப்துல்கலாமின் நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் 2020 விதைகளைக் கொண்டு கலாம் உருவத்தை உருவாக்கி உள்ளார். 2020ஆம் ஆண்டு என்பதை தமது லட்சிய ஆண்டாகக் கருதிச் செயல்பட்டார் கலாம்.
அதை சமுதாயத்துக்கு சுட்டிக்காட்டும் விதமாக கொடிக்கா விதை, சீத்தாப்பழ விதை, குதிரைக்குளம்பு விதை, சீயக்காய் விதை, வேங்கை மரம், புளிய மரம் உள்ளிட்ட ஏழு வகையான விதைகளைக் கொண்டு இந்தப் படைப்பை உருவாக்கியதாக அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் படைப்பை ஏராளமானோர் நேரில் பார்த்து ரசித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

