கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட விவரம் வெளியே தெரியும் முன்பே அதிலிருந்து குணமடைந்துள்ளார் விஷால்.
கிருமித் தொற்றுக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் ஒரே வாரத்தில் குணமடைந்துள்ளாராம்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தையும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"எனது மேலாளருக்கும் கொவிட்-19 பாதிப்பு இருந்தது. இதனால் மூவரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டோம். அதன் பலனாக ஒரே வாரத்தில் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம் என்ற தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று விஷால் தெரிவித்துள்ளார்.

