எட்டுப் புதிய நிறுவனங்களால் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு

எட்டுப் புதிய நிறுவனங்களால் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு

1 mins read
dfe65601-1bca-43bc-b95d-f2ebbc73bc49
ரூ.3,185 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 11 நிறுவனங்களையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இவற்றின் மூலம் 6,955 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. கோப்புப்படம் -

சென்னை: தமிழகத்தில் எட்டுப் புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொளி வழியாக அடிக்கல் நாட்டினார்.

கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீட்கும் முயற்சியாக வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

அத்தகைய ஒப்பந்தங்கள் மூலம், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள எட்டுத் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ரூ.3,185 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 11 நிறுவனங்களையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இவற்றின் மூலம் 6,955 புதிய வேலைகள் உருவாக்கப்படும்.