விதியைக் கடைப்பிடிக்க குடை வழங்கும் கடைக்காரர்கள்

கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சென்னை பூக்கடை பசார், பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க கடைக்காரர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கடைகளுக்கு முன்னால் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. கிருமிநாசினியைக் கையில் தெளித்தும் முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு இலவசமாக முகக்கவசமும் கடைக்காரர்களே வழங்கி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கடைகளுக்கு வருவோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு கடைக்காரர்களே குடைகளை வழங்கி வருகின்றனர். இதற்காக ஆயிரம் குடைகளை வாங்கியதுடன், காவலாளிகள் பத்துப் பேரை பணிக்கு அமர்த்தி, தெருவின் இருபுறமும் நின்று குடைகளை வழங்கி தெருவுக்குள் அனுமதித்துவிட்டு, பூக்களை வாங்கியபின் வெளியே வரும்போது, குடைகளை வாங்கிக்கொண்டு அனுப்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!