கொவிட்-19 சோதனை: தவறான முடிவுகள், வசூல் வேட்டை; திருச்சி ஆய்வுக்கூடத்திற்கு 'சீல்'

கொவிட்-19 சோதனை: தவறான முடிவுகள், வசூல் வேட்டை; திருச்சி ஆய்வுக்கூடத்திற்கு 'சீல்'

1 mins read
f273ab03-bc25-40ff-947f-6104f7869131
படம்: ஊடகம் -

திருச்சி: கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் தவறான முடிவுகளை அளித்து வந்த ஒரு தனியார் ஆய்வுக்கூடத்தை அதிகாரிகள் மூடி 'சீல்' வைத்தனர். திருச்சி உறையூரில் செயல்பட்டு வந்த 'டாக்டர்ஸ் டயாக்னாஸ்டிக் சென்டர்' என்ற அந்த ஆய்வகம், கொரோனா தொற்றாதவர்களுக்கும் 'பாசிட்டிவ்' எனச் சோதனை முடிவுகளை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் பலரோடு இணைந்து, கொரோனா சிகிச்சை அளித்த வகையிலும் அந்நிலையம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது தெரியவந்தது. அது போல, அந்த ஆய்வகம் டெங்கி இருப்பதாக உறுதிசெய்தபின் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தால் அங்கு டெங்கி இல்லை என முடிவு வருவதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களிடம் இருந்து புகார்கள் வர, அந்நிலையத்தை அதிகாரிகள் மூடி 'சீல்' வைத்தனர். அத்துடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.