சூதாட்டம்: பிரபல நடிகர் கைது

சூதாட்டம்: பிரபல நடிகர் கைது

1 mins read
87b46d86-335d-4593-afa2-cd66b5273734
நடிகர் ஷாம் -

சென்னை: பணம் வைத்து சூதாடியது தொடர்பில் நடிகர் ஷாம் (படம்) உட்பட 13 பேரை போலிசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஷாமின் அடுக்குமாடி வீட்டில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு திடீரென இவரது வீட்டிற்குச் சென்று போலிசார் சோதனை நடத்தினர். அப்போது, ஷாம் உட்பட 13 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். இதை அடுத்து, போலிஸ் அவர்கள் அனைவரையும் கைது செய்தது.