வெறுங்காலுடன் வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2000 தந்தார்

வெறுங்காலுடன் வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2000 தந்தார்

1 mins read
5f03e85b-8b4e-4fcc-9ca7-ba930762d10f
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. கோப்புப்படம்: ஊடகம் -

திருவண்ணாமலை: சாதிச் சான்றிதழ் கேட்டு நேற்று முன்தினம் மாணவி ஒருவர் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் வந்திருந்ததை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கண்டார். "ஏன் செருப்பு அணியவில்லை?" என்று அவர் கேட்டதற்கு, செருப்பு அறுந்துவிட்டதாக அந்த மாணவி கூறினார். அவரது மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், 2,000 ரூபாயையும் அவரிடம் கொடுத்து, புதிய செருப்பு வாங்கிக்கொள்ளும்படி சொன்னார். ஆட்சியரின் இச்செயலை அங்கிருந்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.