ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையானதாக அறிவிப்பு; அங்குள்ளவற்றின் பட்டியலில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி...

ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையானதாக அறிவிப்பு; அங்குள்ளவற்றின் பட்டியலில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி...

1 mins read
1e75556c-21e3-4350-a68c-5ed544a57642
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்க பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  படம்: ஊடகம் -

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்க பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த இல்லத்தில் 32,720 பொருட்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அங்கு 4 கிலோ (372 கிராம்) எடையுள்ள மொத்தம் 14 தங்க பொருள்கள், 601 கிலோ எடையிலான 867 வெள்ளிப் பொருள்கள், 8376 புத்தகங்கள், மற்றும் உடைகள், காலணிகள், துண்டு, பெட்சீட், தலையணை உறை உள்ளிட்ட 10438 பொருள்கள், 18 தொலைக்காட்சிப் பெட்டிகள், 10 குளிர்சாதனப்பெட்டிகள், 38 குளிரூட்டிகள், 556 மரச்சாமான்கள், 1712 அலங்காரப்பொருள்கள், 108 அழகு சாதனப்பொருட்கள், மாங்காய், பலா, தென்னை, வாழை என மொத்தம் 13 மரங்கள், 394 நினைவுப் பரிசுகள், 29 தொலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.