தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று புதிய உச்சம் தொடும் பாதிப்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று புதிய உச்சம் தொடும் பாதிப்பு

1 mins read
966fe71c-4b76-45a3-a7ae-5fb7e33201f4
சென்னையில் மீன் சந்தையில் முகக்கவசம் அணிந்தவாறு மீன் வாங்க வாடிக்கையாளர்கள். படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக் கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து புதிய உச்­சம் தொட்டு வரு­கிறது. 27 மாவட்­டங்­களில் இத்­தொற்று பாதிப்பு ஆயி­ரத்­தைத் தாண்டி உள்­ளது.

இது­கு­றித்து தமி­ழக சுகாதாரத்­துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், "மாநிலம் முழுவதும் செவ்வாயன்று ஒரே நாளில் 59,584 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்கொள்­ளப்­பட்­டது. இவர்­களில் 6,972 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது. அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் புதிய தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. 27 மாவட்­டங்­களில் இப் பாதிப்பு ஆயி­ரத்­தைத் தாண்டியது.

"மாநி­லத்­தில் நோய்த்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்கை 227,688 பேராக அதி­க­ரித்­துள்­ளது. அதி­க­பட்­ச­மாக தலை­நகா் சென்­னை­யில் 96,438 போ் பாதிக்­கப்­பட்­டுள்­ளனா். அவா்களில் 86% மக்­கள் குண­ம­டைந்து வீடு திரும்பிவிட்­டனா்.

"சென்­னைக்கு அடுத்­த­ப­டி­யாக, செங்­கல்­பட்டு, திரு­வள்ளூா், விருது­நகா், மதுரை ஆகிய மாவட்­டங்­களில் இந்தக் கிருமியின் தாக்­கம் அதி­க­மாக உள்­ளது. இது­வ­ரை­யில் 3,659 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

"கொரோனா பாதிப்­பில் இருந்து இது­வரை 166,956 பேர் குண­மடைந்து உள்­ள­னர். சிகிச்­சை­யில் 57,073 பேர் உள்­ள­னர்," என்று கூறப்­பட்­டுள்­ளது.