சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகள்

1 mins read
f8b1f49d-9e00-4dd8-ba19-054a055c1b8a
ஜவ­கர் பொறியியல் கல்­லூ­ரி­யில் அமைக்­கப்பட்­டுள்ள சித்த மருத்­துவ முகாம். கோப்புப்படம் - இணையம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தாக்­கத்­தால் நாள்தோறும் ஆயி­ரக்­க­ணக்­கான மக் கள் அவ­திப்பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சென்னை சாலி கிரா­மத்­தில் உள்ள ஜவ­கர் பொறியியல் கல்­லூ­ரி­யில் அமைக்­கப்பட்­டுள்ள சித்த மருத்­துவ முகாமை நாடி தின­மும் ஏரா­ள­மான கொரோனா நோயா­ளி­கள் சிகிச்சை பெறு­வ­தற்­காக வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்த மருத்­துவ முகாம் குறித்து சித்த மருத்­து­வர் கே.வீர­பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "இங்கு காய்ச்­ச­லுக்கு மட்­டும் 'பார சிட்­ட­மால்' ஆங்­கில மருந்து பயன்­படுத்­தப்­ப­டு­கிறது. அதை தவிர்த்து கப­சுர குடி­நீர், சிறப்பு மூலி­கைத் தேநீர், நோயா­ளி­யின் தன்­மைக்­கேற்ப ஏனைய சித்த மருந்­து­கள் வழங்­கப்­பட்டு வருகின்றன. இங்கு சர்க்­கரை நோய், ரத்த அழுத்­தம் உள்­ளிட்ட இதர நோய்­கள் உள்­ள­வர்­களும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்­ள­னர். இது­வரை 2,425 நோயா­ளி­களில் 1,963 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்­ள­னர்," என்று கூறி­னார்.