சென்னை: பாரிமுனை முத்தியால் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் முத்தமிழ்செல்வன் எனப் பெயர் சூட்டினார்.
அதன்பின்னர், சமூல நலத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா முன்னிலையில், சமூக பாதுகாப்புத் துறை குழந்தைகள் நலக் குழு வினரிடம் குழந்தையைப் பத்திர மாக பராமரிக்கும்படி ஒப்படைக்கப் பட்டது.
"முத்தியால்பேட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து கடந்த 14ஆம் தேதி மீட்கப்பட்ட குழந்தை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டது.
"கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்த 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட அக்குழந்தைக்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
"சிறப்பான சிகிச்சை அளித்ததன் காரணமாக குறை வான எடை கொண்ட அந்தக் குழந்தை தற்போது 2 கிலோ எடையுடன் நலமாக இருக்கிறது," என்று விஜயபாஸ்கர் கூறினார்.

