எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை முறியடிக் கணினிப் பிரிவை வலுப்படுத்துகிறது அதிமுக

1 mins read
631364ea-8f59-4b06-bdfc-ffa2f493ffae
கோப்புப்படம் -

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.

கொவிட-19 சூழலில் மக்கள் இணையத்தைச் சார்ந்து செயல்படும் போக்கு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒருமித்த கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

ஆளும் அதிமுக, தன்னுடைய தகவல்தொழில்நுட்பப் பிரிவுக்கு 45,000 நிர்வாகிகளை நியமித்து இருக்கிறது. இந்தப் பிரிவு அதிமுகவின் முக்கிய பிரசார அணியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள், எதிர்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வியூகங்கள் போன்றவற்றை இது கையாளும்.