சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
அந்தக் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பணம் கொடுத்துத்தான் பெற வேண்டும் என்று அது தெரிவித்தது.
வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 61 நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதியும் முறை (பயோ மெட்ரிக்) நடப்புக்கு வந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே வாங்குவதை இந்த முறை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இம்முறை அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டையை படம் எடுக்கும் கருவி களை நீக்கிவிட்டு, கைரேகையை பதியும் வசதியுடைய நவீன கருவி கள் செயல்பாட்டுக்கு வந்தன.
அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றி கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

