ஏடிஎம் இயந்திரத்தில் கொட்டும் சுத்தமான தண்ணீர்

மறை­ம­லை­ ந­க­ர்: ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் அட்­டை­யைப் போட்டால் பணம் வருவது போலவே, சென்னை அருகே மறை­ம­லை­ ந­க­ரில் உள்ள ஏடிஎம்மில் அட்­டை­யைப் போட்டால் சுத்­த­மான தண்­ணீர் கொட்­டு­கிறது.

சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடி­நீரை உற்­பத்தி செய்­யும் ‘ஆல்ஃபா லாவல் இந்தியா’ என்ற அனைத்துலக நிறு­வ­னம் இந்த ஏடிஎம்மை நிறுவி உள்­ளது.

இந்த ஏடிஎம்மில் அட்டையை செரு­கி­னால் 20 லிட்­டர் கேன் தண்­ணீ­ர் கிடைக்கிறது. இதன் விலை 7 ரூபாய் மட்­டுமே.

24 மணி நேர­மும் பணம் எடுப்­பதுபோல், இந்த ஏடிஎம்மிலும் 24 மணி நேர­மும் தண்­ணீர் வரும்.

“சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் சுத்­த­மான குடி­நீர் கிடைக்­கா­மல் குடி­யி­ருப்புவாசி­கள் சிர­மப்­ப­டு­கி­ன்றனர். அவர்­களை மன­தில் வைத்து இந்த ‘குடி­நீர் ஏடிஎம்’ இயந்திரத்தை திறந்­துள்­ளோம்,’’ என ‘ஆல்ஃபா லாவல் இந்­தியா’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. ஆவ­டி­யி­லும் இது போன்ற ஏடிஎம் விரை­வில் திறக்­கப்­பட உள்ளது.