மதுரையில் 6 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

5 வயது சிறுவர்கள் உட்பட மூவர் கைது

மதுரை: மதுரையில் நகைக்காக மூதாட்டி ஒருவரைக் கொலை செய்த வழக்கின் தொடர்பில் 15 வயது சிறுவர்கள் உட்பட மூவர் கைதாகி உள்ளனர். மதுரை நேரு நகரில் கடந்த 16ஆம் தேதி பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக் கொன்றுவிட்டு, 6 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனையூரைச் சேர்ந்த அழகம்மாள், அவரது 15 வயது மகன், மற்றொரு பதின்ம வயது உறவினர் மகன் என மூவரைக் கைது செய்த தனிப்படை போலிசார், விசா ரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன் என்பவ ரையும் தேடி வருகின்றனர்.