முதல்வர் பழனிசாமி: மருத்துவர்களின் ஆலோசனையால் நல்ல பலன் கிடைத்துள்ளது

சென்னை: மருத்­து­வா்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி தமி­ழக அரசு எடுத்த சரி­யான நட­வ­டிக்­கை­க­ளின் பய­னாக சென்னை மாந­க­ரில் கிரு­மித்­தொற்று குறைந்­துள்­ள­தாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரி­வித்­துள்­ளார்.

“சென்னை மாந­க­ரின் குறு­க­லான வீதி­களில் நெருக்­க­மாக வீடு­கள் உள்­ள­தால், இங்கு வசிக்­கும் மக்களிடம் நோய்த்­தொற்று எளி­தா­கப் பரவி விடு­கிறது. எனவே, இத்தொற்­றுப் பர­வல் தொடா்பாக விழிப்­பு­ணா்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு, அதன்மூலம் தொற்று குறைக்­கப்­பட்­டுள்­ளது. கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­களில் வசிக்கும் மக்­களை வெளியே விடா­மல் பாது­காப்­பாக வைத்துள்ளோம். அவா்க­ளுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வசி­யப் பொருட்­களை வசிப்­பி­டத்­துக்கே சென்று விநி­யோ­கம் செய்­கி­றோம். சென்னையில் படிப்­ப­டி­யாக தொற்று குறைந்­தி­ருக்­கிறது. பிற மாவட்­டங்­க­ளி­லும் இத்­தொற்று குறை­வ­தற்­கான அறி­குறி தெரிகிறது,” என முதல்வர் பழ­னி­சாமி கூறினாா்.