உணவகங்களில் சாப்பிடலாம்; 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அதிக தளர்வுகளுடன் ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் தேதி வரை ஆறாம் கட்ட பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஊரடங்குகளைக் காட்டி லும் இம்முறை கட்டுப்பாடுகளை அதிக அளவில் தளர்த்தி உள்ளது தமிழக அரசு. இதனால், மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் எதற்கெல்லாம் அனுமதி தரப்பட்டுள்ளது? இன்னும் என்ன கட்டுப்பாடுகள் உள்ளன? தொடரும் தடைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளில் தளர்வு தற்போது 50% பணியாளர் களுடன் செயல்படும் அனைத்து தொழில், தனியார், ஏற்றுமதி நிறு வனங்களும் 75% பணியாளர்களு டன் செயல்பட அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.

உணவகங்கள், தேநீர் கடை களில் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை, 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து உணவு சாப்பிடலாம். எனினும், குளிர்சாதன வசதிகளை இயக்கக்கூடாது என்ற நிபந்தனை தொடர்கிறது.

சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மட்டும் பொது மக்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் காலை 6:00 முதல் இரவு 7:00 மணிவரை செயல்படும்.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக இடை வெளி, முகக் கவசம் அணிந்து சுதந்திர தின விழாவைக் கொண் டாடுவதற்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

 

தொடரும் கட்டுப்பாடுகள்

பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை என்றும் தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில், விமானப் போக்குவரத்துகளைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

கூட்டம் கூடும் இடத்திற்கு தடை

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தக் கூடாது.

அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சுற்றுலாத் தலங் களுக்கும் செல்ல தடை தொடரும்.

வணிக வளாகங்கள், பள்ளி கள், கல்லுாரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

தடை விலக்கப்படாததால் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயங்காது.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.