கொவிட்-19ஆல் தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா கிருமி தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதிய உச்சம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால் மாநிலத்தில் கிருமி பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 251,738 ஆக அதிகரித்துள்ளது.  

மருத்துவமனைகளில் 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை முடிந்து நேற்று 7,010 பேர் வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 190,966 ஆக அதிகரித்துள்ளது.