கணவனைக் கொன்ற ரவுடி; ரவுடியைக் கொன்ற மனைவி: தந்திரமாக உடல் தகனம்

கோவை: இலங்­கை­யின் மகா ரவுடி என்று குறிப்­பி­டப்­படும் அங்­கொட லொக்கா கொல்­லப்­பட்டு உடல் எரி­யூட்­டப்­பட்­ட­தன் தொடர்­பில் மூன்று பேர் கைது செய்­யப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அந்த மூவ­ரி­டம் பல கோணங்­களி­லும் விசா­ரணை நடப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இலங்­கை­யின் அதி­ப­யங்­கர ரவு­டி­யான அங்­கொட லொக்கா, 2017ல் தன்­னு­டைய விரோதிக் கும்­ப­லைச் சேர்ந்த ஏழு பேரைச் சுட்டுக் கொன்­று­விட்டு இந்­தி­யா­வுக்குத் தப்பி வந்­து­விட்­டார்.

சென்­னை­யில் போலி­சில் தஞ்ச­ம­டைந்த அவ­ருக்­குப் பிணை அனு­ம­திக்­கப்­பட்­டது. பிணை­யில் இருந்­த­போது அங்­கொட லொக்கா பெங்­க­ளூ­ருக்குத் தப்பி ஓடி­விட்­டார். அங்கு அவர் நஞ்சு கொடுத்து கொல்­லப்­பட்­டார்.

அவ­ரின் உடல் பல பாது­காப்பு­களை­யும் கடந்து கோவைக்கு கொண்டுவரப்­பட்டு பிறகு மது­ரைக்குக் கொண்டு செல்­லப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­னது. இதன் தொடர்­பில் பெங்­க­ளூரு, சென்னை, கோவை நக­ரில் உள்ள போலிஸ் அதி­காரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

அந்த விசா­ர­ணை­யின் விளைவாக அங்­கொட லொக்­கா­வின் கள்­ளக்­கா­த­லி­யான அமானி தான்ஜி என்­ப­வ­ரும் சிவ­கா­ம­சுந்­தரி என்ற மாதும் ஈரோடு தியா­னேஸ்­வரம் என்­ப­வ­ரும் போலி­சா­ரி­டம் சிக்கி இருக்­கி­றார்­கள்.

அவர்­களை விசா­ரித்தபோது பல நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­தன.

இலங்­கை­யில் அங்­கொட லொக்கா படுகொலை செய்த ஒருவரின் மனை­வி­தான் அமானி தான்ஜி என்­ப­தும் அவர் தன்­னு­டைய கண­வ­ரைக் கொன்ற அங்­கொட லொக்­காவை பழி வாங்கு­வதற்­காக கள்­ளக்­கா­தலி போல் நடித்து அங்­கொடவுடன் சேர்ந்து இந்­தி­யா­வுக்கு தப்பி வந்­த­தா­க­வும் பெங்­க­ளூ­ரு­வில் அங்­கொட லொக்­கா­வுக்கு நஞ்சு கொடுத்து கொன்று­விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக அங்­கொட லொக்­காவின் பெயரை பிர­திப் சிங் என்று மாற்றி போலி ஆவ­ணங்­கள் தயா­ரித்து சட­லத்தை மது­ரைக்கு கொண்டு சென்று மூவ­ரும் உடலை எரி­யூட்டி இருக்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

அதி­கா­ரி­கள் விசா­ர­ணையை முடுக்­கி­விட்டு இருக்­கி­றார்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon