சமய நல்லிணக்கத்துக்கு ஆதரவு

சமய நல்லிணக்கத்துக்கு ஆதரவு

1 mins read
89c12c1f-051c-45f9-aff1-f4da8cf8b798
கோயில் அமைந்துள்ள இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிலத்துக்கான பத்திரத்தை, புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில், இக்கோயிலை நிர்வகித்து வரும் பசுபதி என்பவரிடம் அப்துல் காதர் ஒப்படைத்தார். படம்: ஊடகம் -

காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் காதர் என்பவர், காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதிச் சாலை ஓரத்தில் உள்ள ஒரு வயல்வெளிப் பகுதியில் தனக்குச் சொந்தமான 4,200 சதுர அடி நிலத்தை, அங்குள்ள இந்து கோயிலுக்காக நன்கொடை அளித்துள்ளார்.

வழிபாட்டுக்காகவும் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் முழு மனதுடன் நிலத்தை வழங்கியதாக அப்துல் காதர் தெரிவித்தார்.