மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் முதல்வருக்கு தலைவர்கள் வரவேற்பு ஆளுங்கட்சி முடிவுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு

சென்னை: மும்­மொ­ழித் திட்­டத்­துக்கு எதிர்ப்­புத் தெரிவித்­துள்­ள தமிழக ஆளுங்கட்சியின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளன.

“தமி­ழக அரசு மும்­மொழிக் கொள்­கையை ஆத­ரிக்­காது, இரு­மொழிக் கொள்­கையை மட்­டுமே தமி­ழ­கம் பின்­பற்­றும்,” என்­று முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறி­வித்­திருந்தார்.

கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும், அதிமுகவின் தனிப்பட்ட கொள்கை இதுதான் என்பதை வெளிப்படையாக அறி வித்துள்ள முதல்வரை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்­வ­ரின் இந்த முடி­வை ஸ்டாலின், ராம­தாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட அர­சி­யல் தலை­வர்­கள் வர­வேற்றுள்ள­னர்.

திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

“புதிய கல்­விக் கொள்கை என்ற பெய­ரால் மும்­மொ­ழித்­திட்­டம் புகுத்­தப்­பட்­டதை எதிர்த்­துள்ள முதல்வர் பழ­னி­சா­மிக்கு நன்றி.

“மத்­திய அர­சின் இந்த மொழிக்­கொள்கை மட்­டு­மின்றி, கல்­விக் கொள்­கையே பல்­வேறு தவ­று­களுடன் அமைந்துள்ளது. இதனால் மாண­வர்­க­ளின் கல்வி உரி­மை­ பறிக்கப்பட வாய்ப்புள்ளது.

“இதன் அடிப்­ப­டை­யி­லும் முதல் வர் தனது எதிர்ப்பை பதிவு செய்­ய­வேண்­டும்,” என்று கூறியுள்­ளார்.

பாமக நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ் டுவிட்­டரில், “முதல்­வரின் அறி­விப்பு வர­வேற்­கத்­தக்­கது. மும்­மொ­ழிக் கொள்­கையை நிரா­க­ரிக்க தமி­ழக அரசு கூறி­யுள்ள அனைத்­துக் கார­ணங்­களும் 3, 5, 8ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வு­க­ளுக்­கும் பொருந்­தும்,” என பதிவிட்டுள்ளார்.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் மாநிலச் செய­லா­ளர் கே.பால­கி­ருஷ்­ணன், “தமி­ழக அரசின் முடிவு வர­வேற்­கத்­தக்­க­து. தமி­ழக அரசு தேசிய கல்­விக்­கொள்­கையை முற்­றி­லு­மாக நிரா­க­ரிக்கவேண்­டும்,” என்று கூறி­யுள்­ளார்.

மக்­கள் நீதி மய்­யம் கட்சித் தலை­வர் கமல்­ஹா­சன், “முதல்­வரின் எதிர்ப்பை வர­வேற்­கும் அதே வேளையில், தேசிய மதிப்­பீட்டு மையம் போன்ற அமைப்­பு­கள் கல்­வி­யில் மாநி­லங்­க­ளின் உரி­மை­களைப் பறிப்­பதை எதிர்ப்­ப­தும் அவ­சி­யம்,” என்றார்.

அகில இந்­திய சமத்­துவ மக்­கள் கட்­சி­யின் தலை­வர் ஆர்.சரத்­கு­மார், “மக்­க­ளின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கும் வகை­யி­லும் பெரும்­பா­லான கட்­சி­யி­ன­ரின் கோரிக்கை அடிப்­ப­டை­யி­லும் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கும் தமி­ழக அரசு தனது நிலைப்­பாட்டைத் தொடர்ந்து, தமி­ழக மக்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­க­வேண்­டும்.” என்று கூறி­யுள்­ளார்.

மக்­கள் கட்சித் தலை­வர் என்.ஆர்.தன­பா­லன், “இரு­மொழி கொள்­கையைத் தான் கடைப்­பி­டிப்­போம் என்று தொடர்ந்து முழக்­க­மிட்ட முதல்வருக்கு பாராட்­டுகள்,” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!