வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் வங்கி ஊழியர்கள்

சென்னை: தேவை­யான பொதுப் போக்­கு­வ­ரத்து வச­தி­கள் ஏதும் இல்­லாத நிலை­யில், வங்­கி­களில் பணி­பு­ரி­யும் 100% ஊழி­யர்­களும் பணிக்­குத் திரும்­பு­வது சாத்­தி­ய­மில்லை என்று கூறி­யுள்­ள­னர் வங்கி ஊழி­யர்­கள்.

வங்­கி­களில் 100% ஊழி­யர்­கள் பணிக்கு வர­வேண்­டும் என்ற உத்­த­ரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி தமி­ழ­கம் முழு­வ­தும் வேலை நிறுத்­தம் செய்ய உள்­ள­தாக தமிழ்­நாடு வங்கி ஊழி­யர்­கள் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து, இந்த கூட்­ட­மைப்­பின் பொதுச் செய­லர் இ.அரு­ணாச்­ச­லம் வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில், “தமி­ழ­கத்­தில் வரும் 31ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. பேருந்து, ரயில் உள்­ளிட்ட பொதுப் போக்கு வரத்­து­களும் இயக்­கப்­ப­டாத நிலை­யில், வெளி­யூர்­களில் வசிப்­ப­வர்­கள் பணிக்­குத் திரும்­பு­வது சிர­மம்.

“அத்­து­டன், வங்­கி­கள் 100% ஊழி­யர்­க­ளு­டன் வழக்­கம்­போல செயல்­பட்­டால் கிரு­மித்­தொற்று பர­வும் வாய்ப்­பும் அதி­கம் உள்­ளது. எனவே, வங்­கி­யின் பணி நேரத்­தைக் குறைக்­க­வேண்­டும், 50% ஊழி­யர்­கள் மட்­டும் பணிக்கு வர அனு­ம­திக்கவேண்­டும்.

“வங்கி ஊழி­யர்­க­ளுக்­காக சிறப்புப் பேருந்து சேவையை ஏற்­படுத்­தித் தர­வேண்­டும் உள்­ளிட்ட 10 கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி வேலை நிறுத்­தம் நடத்த உள்­ளோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon