பல கோடியில் சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் மாளிகை

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா வுக்­காக போயஸ் கார்­ட­னில் பல கோடி ரூபாய் செல­வில் தனி­யார் நிறு­வ­னம் ஒன்று சொகுசு மாளி கையைக் கட்டி வரு­கிறது.

சிறை­யில் இருந்து வெளி­வ­ரும் சசி­கலா ஜெய­ல­லி­தா­வின் போயஸ் கார்­டன் இல்­லத்­தில் குடி­யேற முடியாது என்­ப­தால், ஜெய­ல­லிதா வாழ்ந்த வீட்­டின் அரு­கி­லேயே சசி­க­லா­வுக்­காக பல கோடி ரூபாய் செல­வில் சொகுசு பங்­களா கட்­டப்­பட்டு வருவதாக தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் கைதாகி, பெங்­க­ளூரு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

தனது தண்­ட­னைக் காலம் முடிந்து அவர் விரை­வில் வெளி­வர உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இ்தற்கிடையே, ஜெய­ல­லி­தா­வின் போயஸ் கார்­டன் வீடு தமி­ழக அர­சின் அர­சு­டை­மை­யாகி உள்­ளது.

இந்நிலையில், ‘ஸ்ரீஹ­ரி­சந்­தனா எஸ்­டேட்ஸ்’ என்ற தனி­யார் நிறுவனத்­தின் பெய­ரில் 2019ஆம் ஆண்டு சிஎம்­டி­ஏ­வி­டம் இருந்து மாளிகையைக் கட்ட அனு­மதி பெறப்பட்­டுள்­ளது. தரைத் தளத்­துடன் மேலும் இரண்டு தளங்­கள் உடையதாக, இரு பிரி­வாக இந்த பங்­களா கட்­டப்­பட்டு வரு­கிறது. துணை முதல்­வர் பன்­னீர்­செல்­வம் தலைமையில் செயல்­படும் சிஎம்டி ஏவில் இதற்­கான அனு­மதி பெற்றி ருப்­பது அதி­முக வட்­டா­ரத்­தில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon