நான்கு நாளில் ரூ.24 லட்சம் செலவாகி விட்டதாக கூறிய திருடன்

நான்கு நாளில் ரூ.24 லட்சம் செலவாகி விட்டதாக கூறிய திருடன்

1 mins read
36e8624c-e929-4b8b-b547-3c4cb480b51a
-

திருச்சி: அடகுக் கடை நடத்துபவரின் வீட்டில் பணியாற்றி வந்த கார் ஓட்டுநர், அந்த வீட்டின் பீரோவில் இருந்து திருடிய ரூ.78 லட்சத்தில் 24 லட்சத்தை நான்கே நாட்களில் செலவழித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கார் ஓட்டுநரைக் கைது செய்த காவல்துறையினர், காரின் ஒலிபெருக்கியில் அவர் வைத்திருந்த ரூ.54 லட்சம் பணத்தை மீட்டு, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, தென்னுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர், சிவசக்திவேல், 46. சொத்து முகவராகவும் அடகுக் கடையை நடத்துபவராகவும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி, குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்காக வெளியூர் சென்றார்.

அதன்பின்னர் ஓரிரு தினங்கள் கழித்து வீடு திரும்பியவர், வீட்டில் ரூ.78 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.

சக்திவேலின் கார் ஓட்டுநர் செல்லமுத்து, 43, என்பவர், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.