ரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்

ரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்

1 mins read
30cc413e-da2d-4451-bcb2-e3be8496063d
தஞ்சையில் உள்ள ஸ்டேட் வங்கியின் மேலாளர், அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் குவிந்தனர். அவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தினர். படம்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: 'இரும்­புத் திரை' திரைப்­ப­டத்­தில் வரு­வது போல் பாரத ஸ்டேட் வங்கி, இந்­தி­யன் வங்கி, கனரா வங்கி ஆகிய மூன்று வங்­கி­க­ளைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கணக்­கில் இருந்து ரூ.5 கோடி வரை நுாதன முறை­யில் திரு­டப்­பட்­டுள்­ள­தாகப் புகார் எழுந்­துள்­ளது.

இத­னால் வங்­கி­களில் பணத் ைதப் போட்டு, பணத்தை இழந் துள்ள வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் நேற்று வங்­கி­யில் குவிந்தனர்.

அனைத்து பாது­காப்பு விதிமுறைகளை­யும் மீறி வங்­கிக் கணக்குகளில் இருந்து கோடிக்­கணக்­கான பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது பற்றி தீவிர விசா­ரணை நடத்தவேண்­டும் எனக் கோரி, பாதிக்­கப்­பட்ட வாடிக்கை யாளர்­கள் நேற்று முன்­தி­னம் தஞ்­சா­வூர் காவல் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­த­னர்.

தஞ்­சா­வூர் ரயில் நக­ரைச் சேர்ந்த அப்­துல் முக­மது அயூப், 51, என்ற பொறி­யா­ள­ரின் வங்­கிக் கணக்­கில் இருந்து ஒரேநாளில் ரூ.40,000 எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தஞ்சை பொதுப்­ப­ணித் துறை யில் கண்­கா­ணிப்­பா­ள­ரா­கப் பணி யாற்றி வரும் பால­சுந்­த­ரம் என்ப வரது கணக்­கில் ரூ.30,000 பண மும் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பணம் அனைத்­தும் திருச்­சி­யில் உள்ள ஏடி­எம் மையத் தில் இருந்து எடுக்­கப்­பட்­டுள்ள தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து, தஞ்சை மாவட்ட குற்­றப்­பி­ரிவு போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.