சென்னையில் 32 நாட்களாக குறைந்து வரும் பாதிப்பு

சென்னையில் 32 நாட்களாக குறைந்து வரும் பாதிப்பு

2 mins read
b8149dda-a33f-4046-8425-19d777a38e6f
சென்னையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் குடியிருப்போரின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கிறார் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர். படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இது­வரை 208,784 பேர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் அன்­றா­டம் புதி­தாக பாதிக்­கப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. இது சென்­னை­வா­சி­க­ளுக்கு நிம்­மதி தரும் தக­வ­லாக அமைந்­துள்­ளது.

குண­ம­டை­வோர் விகி­தம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் கிரு­மித்­தொற்று குறித்து பொது­மக்­கள் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை என சுகா­தா­ரத் துறை கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே கொரோனா நோயா­ளி­க­ளுக்கு அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­வ­தாக மாநில சுகா­தா­ரத்­து­றைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

விரு­து­ந­க­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், உலக சுகா­தார நிறு­வ­னம் மற்­றும் அறி­வி­யல் வல்­லு­நர்­கள் கூறி­யுள்­ள­படி நிலை­யான மருந்து மற்­றும் தடுப்­பூசி இல்­லாத நிலை­யில் முகக்­க­வ­சம் மட்­டுமே நோய்த் தொற்­றி­லி­ருந்து அனை­வ­ரை­யும் பாது­காக்­கும் என்­றார்.

தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்புள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 265,285 அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் சுமார் 55 ஆயி­ரம் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­ட­தில் 5,063 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் சுமார் 6,500 பேர் கொவிட்-19 நோயி­லி­ருந்து முழு­மை­யாக விடு­பட்டு வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

சென்­னை­யைப் பொறுத்­த­வரை கடந்த ஒரு மாதத்­துக்கு முன்பு தினந்­தோ­றும் 2 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கிருமி தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்­தன.

இந்­நி­லை­யில் அரசு மேற்­கொண்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளின் பல­னாக தொடர்ந்து 32 நாட்­க­ளாக அன்­றா­டம் பதி­வா­கும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 2 ஆயி­ரத்­துக்­கும் கீழ் உள்­ளது என சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் தற்­போது சுமார் 55 ஆயி­ரம் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.