ரூ.2,000க்காக தாயைக் கொன்று உடலை புதைத்த மகன்கள்

ரூ.2,000க்காக தாயைக் கொன்று உடலை புதைத்த மகன்கள்

1 mins read
01ea6b18-9eed-4528-b29d-773d9d96f6c0
இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் திரும்பிய சரவண பெருமாள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி.கதிரவன் தலைமையிலான போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.   -

ஈரோடு: ஈரோட்டில் ரூ.2,000 பணத்துக்காக, பெற்ற தாயைக் கொன்று உடலை மயானத்தில் புதைத்த இரு மகன்களைப் பிடித்து போலிஸ் விசாரணை நடத்திவருகிறது.

உடற்கூறு ஆய்வு முடிவு வந்ததும் அவர்கள் இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர். கணேசன் என்பவரும் அவரின் மனைவியான சரோஜாவும், 48, கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு விக்னேஷ், 27, அருண்குமார், 23, என்ற இரண்டு மகன்கள் உண்டு. கணேசன் இறந்துவிட்டார். ஆகையால் சரோஜாவும் மகன்களும் சேர்ந்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற சகோதரர்கள், வீட்டில் தாயார் உடலுழைப்பு மூலம் சேர்த்து வைத்திருந்த ரூ 2,000 பணத்தைத் தேடினர். கிடைக்காத தால் அது பற்றி அவர்கள் தங்கள் தாயாரிடம் கேட்டனர். அவர் தான் செலவுசெய்துவிட்டதாகக் கூறினார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த இருவரும் மின்விசிறி பொருத்தப்படும் இரும்புக் கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கியதால் அவர் அலறினார்.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர். தங்கள் தாயார் விழுந்துவிட்ட தாகவும் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதாகவும் கூறிவிட்டு இருவரும் சரோஜா வின் உடலுடன் வீட்டை விட்டு வெளியேறி இடுகாட்டுக்குச் சென்று உடலை புதைத்தனர். இதனிடையே, சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் வந்த வழியில் இடுகாட்டில் சகோதரர்கள் இருந்ததைக் கண்டு அவர்களைக் கைது செய்து உடலைத் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.