செய்தி பார்த்தால் பணம்: ரூ.100 கோடி மோசடி

செய்தி பார்த்தால் பணம்: ரூ.100 கோடி மோசடி

1 mins read
d8b78769-26ea-490c-8f09-52ba048e18bf
-

ஈரோடு: ஹைத­ரா­பாத்தை தள­மாகக் கொண்ட அபெக்ஸ் என்ற நிறு­வனத்­தின் பெய­ரில் தமி­ழ­கம் முழு­வ­தும் ரூ. 100 கோடி மோசடி நடந்து இருப்­ப­தா­க­வும் அது பற்றி தீவிர விசா­ரணை தொடங்கி இருப்­ப­தாகவும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சுரேஷ், சாய்­ராம் என்ற இரண்டு பேரைப் பங்­கு­தா­ரர்­க­ளா­கக் கொண்ட அபெக்ஸ் நிறு­வ­னம், 85 நாடு­களில் இருந்து 19 மொழி­களில் வெளி­யா­கும் உல­கச் செய்­தி­களை செயலி மூலம் பார்த்­தால் 300% வரை லாபம் கிடைக்­கும் என விளம்­ப­ரம் செய்­தது.

இதற்­காக ரூ. 1,440 முதல் ரூ. 48,000 வரை வைப்­புத் தொகை செலுத்­தி­னால், 20 மாதங்­களில் 4 மடங்கு லாபம் கிடைக்­கும் என­வும் விளம்பரத்தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பல்­வேறு வகை­யான திட்டங் களை அறி­வித்த அந்த விளம்­ப­ரம், புதி­ய­வர்­க­ளைச் சேர்த்­து­விட்­டால் 20% தொகை கிடைக்­கும் என்­றும் உறுதி அளித்­தது. இந்தக் கவர்ச்சி­களை நம்பி தமி­ழ­கம் முழு­வ­தும் மொத்­தம் 100,050 பேர் அதில் உறுப்­பி­ன­ரா­கச் சேர்ந்­த­னர்.

அவர்­கள் ரூ. 100 கோடிக்­கும் மேலாக முத­லீடு செய்து இருக்­கிறார்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் திடீ­ரென அபெக்ஸ் நிறு­வ­னம் காணா­மல் போய்­விட்­டது. அதன் செயலி முடங்கியது.

இத­னை­ய­டுத்து ஈரோட்டில் சிலர் போலி­சி­டம் புகார் தெரி­வித்­த­னர். போலி­சார் வழக்­குப் பதிந்து விசா­ர­ணயை முடுக்­கி­விட்டு இருக்­கி­றார்­கள்.