நீலகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை; 600 முகாம்களில் மக்கள் தஞ்சம்

நீலகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை; 600 முகாம்களில் மக்கள் தஞ்சம்

2 mins read
2df2c6b2-02b5-4958-b97e-3182f32c7c27
-

நீல­கிரி: கன­மழை, வெள்­ளப் பெருக்கு, மண்­ச­ரிவு போன்ற பாதிப்­பு­க­ளின் கார­ண­மாக நீல­கிரி மாவட்ட மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிப்புக்குள் ளாகி உள்­ளது.

இயற்கை வளங்­கள் ஒருங்கே நிறைந்­துள்ள நீல­கி­ரி­யில், கடந்த சில நாட்­க­ளா­கவே தொடர்ந்து கன­ம­ழை­யு­டன் சூறா­வளி காற்­றும் வீசி­வ­ரு­வ­தால் 200க்கும் மேற்­பட்ட இடங்­கள் அபா­ய­க­ர­மான பகுதி களாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

எங்கு பார்த்­தா­லும் வெள்­ளப் பெருக்கு, முறிந்து விழுந்த மரங் கள், சாய்ந்து விழுந்த மின் கம்­பங்­கள், சரிந்து விழுந்த மலை முக­டு­கள், மண்சரி­வு­களுடன் பாதிக்­கப்­பட்­டுள்­ள நீல­கிரி காட்சி அளிக்கிறது.

நீல­கிரி உள்­ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகு­தி­களிலும் கன­மழை பெய்­து­வ­ரு­வ­தால் 100க்கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் வெள்­ளத்­தில் சிக்­கி­யுள்­ளன.

இப்ப­கு­தி­களில் வசிக்­கும் மக்க ளைப் பாது­காப்­பாக தங்­க­வைக்க 567 முகாம்­களுக்கு மாவட்ட நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

அத்­து­டன், இந்த முகாம்­களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­மல் இருக்கும் வகையிலும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

நீல­கிரியில் தொடர் கன­ம­ழை­காரணமாக சத்­தியா நக­ரில் திடீ­ரென நிலச்­ச­ரிவு ஏற்பட்டு, பூமி பிளவு­பட்­டது. இதர சில இடங்­க­ளி­லும் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, அம்மாவட்­டத்­திற்கு சிவப்பு எச்­ச­ரிக்கையை விடுத்­துள்­ளது வானிலை ஆய்வு மையம்.

ஏற்­கெ­னவே மின்­சா­ரம், தொலைத்தொடர்புகளும் துண்­டிக்­கப்பட்­டுள்­ளன. சில வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

வனப்­ப­குதி ஆறு­கள், ஓடை­கள் உள்­ளிட்ட நீர்நிலை­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­பிறகும் மழை நீடிக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் மக்­கள் அச்­ச­ம் அடைந்­துள்­ள­னர்.

தென்­மேற்கு பரு­வ­ம­ழை­ உதகை, கூட­லூர் பகு­தி­களில் பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உத­கை­யைச் சுற்­றி­யுள்ள இத்­த­லார், எம­ரால்ட், அவ­லாஞ்சி உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த மூன்று நாட்­க­ளா­கத் தொட­ரும் கனமழை­யால் பல இடங்­களில் மண்சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

தாழ்வான பகுதி களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ஓவேலி ஆறு, மாயாறு, பாண்டி யாறு, புன்னம்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

படம்: ஊடகம்