ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு

ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு

1 mins read
0260351e-b5bf-4f6f-a1a4-41431a4c1044
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்போரின் உடல்வெப்ப நிலையைப் பரிசோதிக்கும் சுகாதாரத்துறை ஊழியர். படம்: ஏஎப்பி -

சென்னை: மாநிலம் எங்கும் உடற்பயிற்சிக் கூடங்கள் இம்மாதம் 10ஆம்தேதி முதல் செயல்படுவதற்கு முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

"50 வயதுக்கு அதிக மானோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள் உடற்பயிற்சிக் கூடங்களைப் பயன்படுத்த தடை தொடர்கிறது.

"உடற்பயிற்சியின்போது ஒவ்வொருவரும் குறைந்தது 6 அடி இடைவெளி விடவேண் டும். உடற்பயிற்சி வளாகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்," எனக் கூறப்பட்டுள்ளது.