சுடச் சுடச் செய்திகள்

மரத்தில் கார் மோதி நான்கு இளைஞர்கள் பலி

கோவை: கோவை அருகே பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிய இளைஞர்கள் நால்வர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம்-அணைக்கட்டி சாலையில் காளையனூர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணி யளவில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப் பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது.

பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து காளையணூர் பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடினர். காருக்குள் நால்வர் இறந்து கிடந்தனர். காயமடைந்த கல்லூரி மாணவர் பிரஜீஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்களின் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்தவர்கள் கோவை சீர நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ் (22), பூக்கடையைச் சேர்ந்த கார்த்திக் (22), வடகோவை யைச் சேர்ந்த மணிகண்டன் (22), வடவள்ளியைச் சேர்ந்த மோகன்ஹரி (23) எனவும் காயமடைந்தவர் வடகோவையைச் சேர்ந்த பிரஜீஸ் (23) எனவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

நண்பர்கள் ஐவரும் கவுண்டம் பாளையத்தில் நடந்த நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பும்போது உயிரிழந்ததும் விசா ரணையில் தெரியவந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon