தமிழகத்தில் 4வது நாளாக 100ஐ கடந்த பலி

தமிழகத்தில் 4வது நாளாக 100ஐ கடந்த பலி

1 mins read

சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக நேற்றும் பலி எண்ணிக்கை 100 பேரைக் கடந்தது. நேற்று காலை வரை ஒரேநாளில் 110 பேர் பலியானதை அடுத்து தமிழகத்தில் பலி எண் ணிக்கை 4,571ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

"நேற்று காலைவரை ஒரே நாளில் தமிழகத்தில் 5,684 பேருக்கு புதிதாக கிருமித் தொற்று பரவியது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை இத்தொற்றால் 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இந்த 5,684 பேரில் 1,091 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். இவர்களுடன் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,096ஆக உயர்ந்துள்ளது.

"தமிழகத்தில் குண மானோர் எண்ணிக்கை 221,087ஆக உயர்ந்துள்ளது," என அது அறிவித்துள்ளது.