சென்னையில் குறையும் பாதிப்பு

சென்னையில் குறையும் பாதிப்பு

2 mins read
7f707a2e-3dbf-4591-9e1a-501ab57a3c56
கொரோனா ஊரடங்கு காரணமாக மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன. படம்: ஏஎஃப்பி -

சென்னை: சென்­னை­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கிறது. இது தொடர்­பாக சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்ட புள்ளி விவ­ரங்­கள் சென்னை மக்­க­ளுக்கு நிம்­மதி அளித்­துள்­ளன.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 119 பேர் உயி­ரி­ழந்­தனர். வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சுமார் 65 ஆயி­ரம் பேருக்கு கிரு­மித்­தொற்­றுக்­கான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் 3,445 ஆண்­கள், 2,435 பெண்­கள் என மொத்­தம் 5,880 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டது.

இவ்­வாறு தின­மும் ஆயி­ரக்­கணக்­கா­னோர் பாதிக்­கப்­ப­டு­வது மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், சென்­னை­யில் பாதிப்பு குறைந்து வரு­வ­தாக வெளி­யான தக­வல் ஆறு­த­லாக அமைந்­துள்­ளது.

சென்­னை­யில் அன்­றா­டம் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை முதன்முறை­யாக வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஆயி­ரத்­துக்­கும் குறை­வா­கப் பதி­வா­னது. வெள்­ளிக்­கி­ழமை அதிக­பட்­ச­மாக சென்­னை­யில் 984 பேரும் திருவள்ளூரில் 388 பேரும் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னது உறு­தி­யா­கி­ உள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் இது­வரை சுமார் மூன்று மில்­லி­யன் மாதிரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் 2,85,024 பேருக்கு கிரு­மி தொற்­றி­யது உறு­தி­யா­னது. இது­வ­ரை­யில் தமி­ழ­கத்­தில் 4,690 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இது­வரை 2,27,575 பேர் தொற்­றில் இருந்து விடு­பட்­டுள்­ள­னர். சுமார் 52 ஆயி­ரம் பேர் மருத்துவ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் தொடக்­கம் முதலே கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்­கப்­பட்­டது சென்னை மாவட்­டம்­தான். சென்­னை­யில் ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக 1,100 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்­தன. இந்­நி­லை­யில் 51 நாட்­க­ளுக்­குப் பிறகு புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை மீண்­டும் மூன்று இலக்­கங்­க­ளாக குறைந்­துள்­ளது.

51 நாட்களுக்குப் பிறகு புதிய தொற்றுச் சம்பவங்கள் ஆயிரத்துக்கும் கீழ் பதிவாயின