'மாநில மொழியையும் அதன் அடையாளத்தையும் அழித்துவிடக்கூடியது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை'

1 mins read
42267657-283d-4d35-89b2-dc9227e26f5c
-

சென்னை: அனை­வ­ரை­யும் உள்ளடக்­கிய தர­மான கல்­வியை உறு­திப்­ப­டுத்த திமுக எப்­போ­தும் உழைத்து வரு­கிறது என்று அக்­கட்­சித் தலை­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், தமிழ் மொழி­யை­யும் அதன் அடை­யா­ளத்­தை­யும் மறைப்­ப­தன் மூலம் இந்த வளர்ச்சி­யைத் தடுக்­கக்­கூ­டிய அச்­சு­றுத்­தலை தேசிய கல்­விக் கொள்கை ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

நாட்­டின் ஒவ்­வொரு மூலை­யி­லும் உள்ள குடி­மக்­க­ளின் வாழ்க்கை­யைப் பாதிக்­கும் இந்­தக் கொள்கை குறித்து விவா­திக்க மற்­றும் விமர்­சன ரீதி­யாக பகுப்­பாய்வு செய்ய, மாநி­லங்­கள் மற்­றும் மத்­தி­யில் இருந்து தொடர்­புள்ள அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பங்­கேற்­ப­தற்­கான ஓர் ஆலோ­ச­னைச் செயல் முறையை மீண்­டும் நிறுவ வேண்­டும் என ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேலும், தேசிய கல்­விக் கொள்கை 2020ஐ மறு­வ­டி­வ­மைத்து, நாடா­ளு­மன்ற அமர்­வின் மூலம், நாட்­டின் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம், கூட்­டாட்சி முறை மற்­றும் அனைத்­தை­யும் உள்­ள­டக்­கிய நடை­மு­றையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்றை மீண்­டும் உறு­திப்படுத்த வேண்­டும் என மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழக மாண­வர்­க­ளின் நலன் கருதி மத்­திய அர­சின் தன்­னிச்­சை­யான முடிவை அமல்­ப­டுத்­து­வதை நிறுத்தி வைக்க வேண்­டும் என பிர­த­மர் மோடியை வலி­யு­றுத்து­கிறேன்," என மு.க.ஸ்டா­லின் தமது பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

தமது இந்­தப் பதி­வில் உள்ள அனைத்து விவ­ரங்­க­ளை­யும் பிரதமர் மோடிக்கு கடி­தம் வழி தெரி­வித்­துள்­ளார் ஸ்டா­லின்.

அதில் மேலும் பல முக்­கிய தக­வல்­களை அவர் குறிப்­பிட்­டி­ருப்­ப­தாக திமுக வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.