93 வயதில் எடை தூக்கி அசத்தும் ராக்கம்மாள்

93 வயதில் எடை தூக்கி அசத்தும் ராக்கம்மாள்

1 mins read
394fbdd5-1079-40b1-a331-58c056254405
ராக்கம்மாள். படம்: ஊடகம் -

திருவள்ளூர்: 93 வயதாகும் மூதாட்டி ராக்கம்மாள் ஐம்பது கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கி உடற்பயிற்சி செய்கிறார்.

திருவள்ளூரைச் சேர்ந்த இவர் இந்த வயதிலும் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்துகிறார்.

சிறு வயதில் இருந்து கடைப்பிடித்து வரும் முறையான உணவுப்பழக்கமே தமது ஆரோக்கியத்தின் ரகசியம் என்று குறிப்பிடும் ராக்கம்மாள் பாட்டி, முடக்கத்தான் கீரை, தூதுவளை, பிரண்டை உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டால் வாழ்வின் இறுதிவரை ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார்.

தமது பேரக் குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் மூலிகை உணவுகளை மட்டுமே கொடுத்து வளர்த்து வருவதாகச் சொல்கிறார் ராக்கம்மாள்.